
சென்னையில் தாயுடன் தகராறில் ஈடுபட்ட தந்தையை செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்த தேசமுத்து என்பவர் இன்று காலை படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் நேற்று இரவு குடிபோதையில் தேசமுத்துவுக்கும் அவரது மகன் டேவிட் என்ற விஜய்க்கும் தகராறு நடந்துள்ளது.
தொடர் விசாரணையில், தாய் முனியம்மாவை தகாத முறையில் திட்டி தகராறில் ஈடுபட்டதால், இரவு அனைவரும் தூங்கிய பின், செல்போன் சார்ஜ் போடும் வயரால் தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விஜய் வாக்குமூலம் அளித்துள்ளார்.