மகனை கண்டித்த தந்தை! தந்தை கண்டித்ததால் இப்படி செய்த மகன்!!

மதுரை மாவட்டம் மேலூரில் தந்தை கண்டித்ததாக கூறி, செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனை கண்டித்த தந்தை!  தந்தை கண்டித்ததால் இப்படி செய்த மகன்!!

மதுரை மாவட்டம் மேலூரில் தந்தை கண்டித்ததாக கூறி, செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாகாலனியை சேர்ந்த ஈசாக் முகமது, வேன் ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த ஈசாக் முகமது, செல்போன் டவர் மீது ஏறி, உச்சியில் இருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அவரது நண்பர்கள் எவ்வளவோ கெஞ்சியும், கீழே இறங்கி வராத ஈசாக் முகமது, காவலர்கள் சமாதானப்படுத்திய பிறகு கீழே இறங்கி வந்தார்.

இதனையடுத்து, அவரை தங்களது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.