தாயை கொன்ற நபரை கல்லால் தாக்கி கொலை செய்த மகன்

நாகையில் சொத்து தகராறில் தாயை கொன்ற நபரை, மகன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தாயை கொன்ற நபரை கல்லால் தாக்கி கொலை செய்த மகன்
Published on
Updated on
1 min read

நாகையில் சொத்து தகராறில் தாயை கொன்ற நபரை, மகன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவில் வீரகாளி என்பவர் தனது மனைவி தனபாக்கியம் மற்றும் மகன்கள் பிச்சைமுத்து, முத்துப்பாண்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். அண்மையில் பிச்சைமுத்து, ஜெயபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிலத்தில் அதற்கு முன் அவரது உறவினரான ராஜூ என்பவர் பன்றிகளை மேய்த்து வந்துள்ளார். நிலத்தை வாங்கிய பின்னும் ராஜூ அந்த இடத்தில் பன்றிகளை மேய்த்ததால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று ராஜூ அங்கு வந்த வீரகாளியை தகாத வார்த்தையால் திட்டி, கையில் வைத்திருந்த அரிவாளால் தோள் பட்டையில் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த தனபாக்கியத்தையும் ராஜூ அரிவாளால் கழுத்தறுத்துள்ளார். இதில் தாய் இறந்ததை பார்த்து ஓடோடி வந்த வீரகாளியின் இளைய மகன் முத்துப்பாண்டி அங்கு கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து ராஜூவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார் இரு உடல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com