அரசனை நம்பி புருஷனை விட்ட கதை... கள்ளக்காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற அவலம்...

தன்னை நம்பி வந்த கள்ளக்காதலியின் கழுத்தை கள்ளக்காதலனே நெரித்துக் கொலை செய்திருக்கிறார். கணவனை உதறி விட்டு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசனை நம்பி புருஷனை விட்ட கதை... கள்ளக்காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற அவலம்...

சென்னை: மாங்காடு பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா. 2 மகன்களை பெற்றெடுத்த இந்த நதியாவுக்கு திருமணத்துக்கு பின்னும் இன்னொருவரினால் காதல் நதி ஊற்றெடுக்கத் தொடங்கியிருக்கிறது. பொழுதை போக்குவதற்கு பேஸ்புக் சென்றவருக்கு தங்கராஜ் என்பவரின் பேஸ் மிகவும் பிடித்து போனது.  

மேலும் படிக்க | வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...

பேஸ்புக் மூலம் காதலை வளர்த்த கள்ளக்காதல் ஜோடி

திருவண்ணாமலை கண்ணக்குருக்கை ஊராட்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் லாரி ஓட்டும் நேரத்தை தவிர, பேஸ்புக்கில் நதியாவிடம் பேசி பொழுதை ஓட்டியிருக்கிறார். எவ்வளவு நாள்தான் ஆன்லைன் வழியே கடலை போடுவது, நேரில் பார்த்தே காதலை பகிர்ந்து கொள்வது என்று முடிவுக்கு வந்த நதியாவும், தங்கராஜும் ஒருசுபவேளையில் கள்ளக்காதலை துவக்கி உள்ளனர்.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு நன்னெறி கல்வி மிக அவசியம்..!- உயர்நீதிமன்ற மதுரை கிளை...

கணவன் மனைவியால் வீதிக்கு வந்த ஜோடி

படிதாண்டிய நதியாவின் விவகாரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பாவிக் கணவன் பார்த்தசாரதி, விவகாரம் விபத்தில் முடிவதற்குள் தடை போட்டிருக்கிறார். ஆனால் லாரி ஓட்டுநர் தங்கராஜோ வேகத்தடையை உடைத்து காதலை வளர்த்துள்ளார். ஒருகட்டத்தில் பார்த்தசாரதி, பாய்சனாக தோன்ற கணவனையும், பெற்ற பிள்ளைகளையும் அம்போவென கைகழுவி விட்டு தங்கராஜாவே உலகம் என போய் நின்றுள்ளார் நதியா. 

மேலும் படிக்க | மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அடித்தே கொலை செய்த குடும்பம்...

சென்னையில் இருந்து திருவண்ணாமலை பறந்த சின்னக்குயில் வாழ்ந்தால் உன்னோடு இல்லையேல் மண்ணோடு என கீதம் இசைத்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் தங்கராஜூக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு பேச்சுக்கு வந்து விடு என்றால், உண்மையாகவே புருஷனை விட்டு வந்து விட்டாளே என பரிதவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய கையெறி குண்டு தாக்குதல்.. 2 கூலித் தொழிலாளிகள் உயிரிழப்பு..!

தேடி வந்த கள்ளக்காதலியை திருப்பி அனுப்பிய காதலன்

மேலும், தங்கராஜின் மனைவி உமாவும், இந்த செயலைக் கண்டு காரித் துப்பியதோடு, இருவரையும் கழுத்தை பிடித்து வெளியே துரத்தியடித்திருக்கிறார். நன்றாக இருந்த குடும்பத்தில் கும்மியடிப்பதற்காகவே இங்கு வந்தாயா? என நதியாவை நாராச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் தங்கராஜ். இப்போதே உன் கணவர் வீட்டுக்கு சென்று விடு.. இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டவும் செய்திருக்கிறான் அந்த தொடைநடுங்கி மன்மதன். 

மேலும் படிக்க | பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகள் விடுதலை.. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

திரும்ப செல்ல மறுத்தால் கழுத்து நெரித்துக் கொலை

அரசனை நம்பி புருஷனைக் கை விட்டு வந்தோமே என்பதை நினைத்த நதியா,  தன்னை மனைவியாக்குமாறு கண்ணீர் மல்க கெஞ்சிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், கள்ளக்காதலி நதியாவின் சேலையை அவிழ்த்து, கழுத்தை சுற்றிக் இறுக்கி கொலை செய்தான். பெரிய கோளாப்பாடி மலைக்குன்றில் நடந்த இந்த சம்பவத்தை அறிந்து மக்கள் சென்று பார்த்தனர். அங்கு கழுத்து இறக்கப்பட்ட நிலையில் நதியாவின் சடலம் கிடந்தது. 

மேலும் படிக்க | வாட்ஸ்-அப்பில் சாதிப்பெருமை பேசியதால் வெட்டிக் கொலை... எங்கே செல்கிறது சமூகம்?

எப்போது தீரும் இந்த கள்ளக்காதல் மோகம்?

இந்த சம்பவம் அறிந்த போலீசார், நதியாவின் சடலத்தை மீட்டதோடு, தப்பியோடிய தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற குடும்பப் பெண்ணின் நிலைமை பலருக்கும் பாடமாய் அமைந்துள்ளது.