பள்ளி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி...

12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி...
Published on
Updated on
1 min read

நாமக்கல் | ராசிபுரத்தில் (SRV) தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை சேர்ந்த தியாகு என்பவரது மகள் சுவாதி 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.

அதிகாலை சிறப்பு  வகுப்பிற்கு சுவாதி சென்று வந்த பிறகு அறையில் உள் தாள் மூலம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் விடுதி காப்பாளர் அறைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சுவாதி அறை மட்டும் பூட்டப் பட்டிருந்ததை கண்டு காப்பாளர் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுவாதி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த காப்பாளர் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் சுகவனம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி சுவாதி படிப்பில் நன்றாக படித்து பள்ளியில் முதலிடம் பெற்று வருவதாகவும் மாணவி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையின் விசாரணையிலே தெரிய வரும்.

மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com