வலி நிவாரணி எனக்கூறி போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் .....!

வலி நிவாரணி எனக்கூறி போதை மாத்திரை விற்ற வாலிபர்கள் .....!
Published on
Updated on
1 min read

குஜராத்தில் இருந்து ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை போதை மாத்திரைகளாக விற்பனை செய்த மூன்று பேர் கொண்ட கும்பல் கைது. 

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சந்தேகப்படும் படியான வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனை அடுத்து ஏற்கனவே பல்வேறு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சிலரை கொடுங்கையூர் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

அந்த வகையில் நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு ராஜரத்தினம் நகர் அருகே போலீசார் சந்தேகப்படும் படியாக மூன்று நபர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் 26 கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற சின்னப் பாம்பு 24 தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் 20 என்பது தெரிய வந்தது. 

இதில் ஆல்பர்ட் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது மேலும் இவர்கள் மூன்று பேரும் குஜராத் மாநிலத்தில் இருந்து  வலி நிவாரண மாத்திரைகளை ஆன்லைன் மூலம் பெற்று அதனை கூடுதல் விலைக்கு வட சென்னையின் பல்வேறு இடங்களில் விற்று வந்ததாக  போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.  

மேலும் இவர்களுக்கு நன்கு அறிமுகமான சிலரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி   அதை சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதனை யடுத்து இவர்களிடம் இருந்து 15 அட்டைகளில் இருந்த 150 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 250 கிராம் கஞ்சா உள்ளிட்டவற்றை கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com