மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் தந்தை செய்த விபரீத செயலால் மகளும், தந்தையும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வைல் பார்லேவில் ஸ்ரீகிருஷ்ணா பாட்டீல், சாயா தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மயக்க மருந்து நிபுணரான தந்தை பாட்டீலுக்கு கொரானா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் ஊதியம் இன்றி தவித்து வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, மகளுக்கு 37 வயதாகியும் திருமணம் செய்து வைக்க முடியாமல் தினந்தோறும் கவலை அடைந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நினைத்த மயக்க மருந்து நிபுணரான தந்தை பாட்டீல், அவரின் மனைவி மற்றும் மகளுக்கு பிளட் டெஸ்ட் எடுப்பதாக பொய் சொல்லி அவர்களின் உடலில் விஷத்தை செலுத்தியுள்ளார். பின்னர் அவரும் அந்த விஷத்தை உடலில் செலுத்திக்கொண்டு உயிரிழந்தார்.
எனினும் மறுநாள் காலையில் அவரின் மனைவி சாயா மட்டும் எழுந்து பார்த்த போது கணவரும், மகளும் உயிரிழந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரனையில், குடும்ப பிரச்சனை காராணமாக மனைவி, மகளுக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. ஆனால் இந்த விபரீத முயற்சியில் இருந்து மனைவி சாயா மட்டும் உயிர் தப்பித்தார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.