பெற்ற மகளையே பயமுறுத்தி உல்லாசம் அனுபவித்த காமவெறிப் பிடித்த தந்தை!!

கடந்த 4 ஆண்டுகளாக மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
பெற்ற மகளையே பயமுறுத்தி உல்லாசம் அனுபவித்த காமவெறிப் பிடித்த தந்தை!!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோணப்பா. காமவெறி பிடித்த இவர் தனது மனைவிக்கே தெரியாமல் மகளை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்  செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் தந்தை கொடுத்து வரும் பாலியல் தொல்லையை வெளியே சொல்வதற்கு பயந்துபோய் 3 ஆண்டுகளாகவே மறைத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தந்தையின் காமவெறியை பொறுத்துக்கொள்ளாத மகள் தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். மகள் கூறியதை கேட்ட தாய் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

பின்னர் இது தொடர்பாக கணவன் கோணப்பாவிடம் கேட்டுள்ளார். அப்போது உண்மையை ஒத்துக்கொண்ட கோணப்பா, இந்த விஷயம் வெளியே தெரிந்தால் இருவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த தாய், இந்த அரக்கனிடம் இருந்து தனது மகளை காப்பாற்ற எண்ணி தனது  மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு எடுத்துள்ளார்.

இதை அறிந்த கோணப்பா, திருமணம் ஆனாலும் உன்னைவிட மாட்டேன் என்று கூறி பயமுறுத்தி உள்ளார். இவரின் மிரட்டலுக்கு பயந்து போன கோணப்பாவின் மனைவி தனது குடும்பத்தினருக்கு இதுபற்றிய தகவலை தெரிவித்தார். இதையெல்லாம் கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற உறவினர்கள் கிராம மக்களின் உதவியுடன் கோணப்பாவை அடித்து துவைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com