திருவொற்றியூரில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை உலக்கையால் அடித்து கொன்ற கணவன் போலீசில் சரணடைந்தார்.
வடசென்னையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் - இந்திராணி தம்பதி. கூலித்தொழிலாளியான துரைராஜ், கடந்த 11 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக, மனைவி இந்திராணி அப்பகுதியில் உள்ள டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி இந்திராணி அருகிலுள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வந்ததால், அது பிடிக்காத கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் துரைராஜ், வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து ஓங்கி அடித்ததில் பற்கள் எல்லாம் சிதறியபடி இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஆத்திரத்தில் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் திருவெற்றியூர் காவல் நிலையத்தில் தாமாகவே சென்று சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.