படம் ரேஞ்சுக்கு அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி!! 4 பேர் பலியான சோகம்

படம் ரேஞ்சுக்கு அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லாரி!! 4 பேர் பலியான சோகம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிராவில், கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை- புனே எக்ஸ்பிரஸ்  வழிதடம் வழியாக இன்று காலை லாரி ஒன்று பொருட்களுடன் சென்றது. வாகனம் கொபோலி என்ற பகுதியை நெருங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதியது.

இதனால் அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com