பிரபல கோனிகா கலர்லேப் நிறுவனர் வீட்டில் நடந்தேறிய கொள்ளை சம்பவம்... தீவிர விசாரணையில் போலிசார்!!!

பிரபல கோனிகா கலர்லேப் நிறுவனர் வீட்டில் நடந்தேறிய கொள்ளை சம்பவம்... தீவிர விசாரணையில் போலிசார்!!!

சென்னை வடபழனியில் பிரபல கோனிகா கலர்லேப் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் 66 சவரன் தங்க வைர நகைகள், 80 கிலோ வெள்ளி மற்றும் 13 லட்சம் ரொக்க கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வடபழனி குமரன் காலனி இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார்.  இவர் பிரபல கோனிகா கலர்லேப் நிறுவனராவார்.  கடந்த மாதம் 22 ஆம் தேதி மனைவி அருணா தேவியுடன் ரயிலில் மாலை 4 மணி அளவில் ஹைதராபாத் சென்றுள்ளார்.  28ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் வலது பக்கவாட்டில் உள்ள மரக்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கவனித்துள்ளார்.

உடனே வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது முதல் மாடியில் நகை பணம் வைர ஆபரணங்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட்டிருப்பதைக் கவனித்துள்ளார்.  உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் உதவி ஆணையர் சுப்பிரமணி மேற்கு மண்டல இணை ஆணையர் திரு மனோகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 13.5 லட்சம் ரொக்க பணம் 66 சவரன் தங்க நகை மற்றும் 80 கிலோ வெள்ளி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்ற அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com