திருந்தி வாழவேண்டும் மச்சா,.. எனக்கே அறிவுரையா.? பூந்தொட்டியால் அடித்துக்கொள்ளப்பட்ட நண்பன்.! 

திருந்தி வாழவேண்டும் மச்சா,.. எனக்கே அறிவுரையா.? பூந்தொட்டியால் அடித்துக்கொள்ளப்பட்ட நண்பன்.! 

சென்னையில் திருந்தி வாழ வேண்டும் என்று அறிவுரை கூறிய நண்பன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் என்ற கார்க் (வயது 25). இவர் மதுபோதையில் தனது உறவினரை கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சிறையிலிருந்து வெளியே வந்த அவர் தனது நண்பர்களான அஜித்குமார் என்ற ரசம் , ரவி, தினேஷ் ஆகியோரோடு தனது வீட்டில் கஞ்சா மற்றும் மது அருந்திவந்துள்ளார்.

அப்போது நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அஜித்குமார் (வயது 21)"குற்றங்களை செய்து சிறைக்கு போவது நல்லா இல்லை. இதனால் திருந்தி வாழ வேண்டும்" என்று எட்வினுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எட்வின் அஜித்குமாரோடு சண்டை போட்டுள்ளார். இந்த சண்டையை நண்பர்கள் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளார்கள்.

அதன்பின் சிறிதுநேரம் பேசிவிட்டு அனைவரும் கிளம்ப அஜித்குமார் என்னோடு இன்று உறங்கட்டும் என்று எட்வின் கூறி பிறர் வீட்டுக்கு சென்றுள்ளனர். அஜித்குமாரும், எட்வினும் உறங்க சென்றுள்ளனர். இந்நிலையில் காலை ரவி, தினேஷ் இருவரும் எட்வினின் வீட்டுக்கு செல்ல அங்கு அஜித்குமார் பூந்தொட்டியால் அடித்துக் கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இது குறித்து சம்பவம் அறிந்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எட்வினை தலைமறைவான எட்வினை தேடிவருகிறார்கள். அறிவுரை கூறிய நண்பன் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com