கேஷியரின் கவனத்தை திசை திருப்பி செல்போன், பொருள் திருட்டு! வீடியோ வைரல்!!

சென்னையில் கெருகம்பாக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கவனத்தை திசை திருப்பி விலையுயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை திருடிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அந்த பகுதியிப் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். பிரேம் குமார் இல்லாத நேரத்தில் அவரது மகள் கடையை கவனித்து வந்துள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் தம் வீட்டு வீசேசத்திற்கு மளிகை சாமான் வேண்டும் என்று கூறி அரிசி,பருப்பு உள்ளிட்டவைகளை வரிசையாக கூறியுள்ளார். அப்போது கடையில் ஒரு பெண் மட்டுமே வேலைக்கு இருந்தால் கடையின் கல்லா பெட்டியை கவனித்து வந்த பிரேம் குமாரின் மகளிடம் அந்த மர்ம நபர் வேலைக்கார பெண்ணுக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

அப்போது கல்லா பெட்டி அருகே இருந்த விலையுயர்ந்த செல்போன் மற்றும் பொருட்களை திருடிவிட்டு அப்படியே ஒன்றும் கூறாமல் சென்றுவிட்டார். அந்த மர்ம நபர் சென்ற பின் தான் செல்போனும், பொருட்களும் காணாமல்  போனது. அப்போது சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்த போது அந்த மர்மநபர் திருடிச் சென்றது. இது குறித்து மாங்காடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சி.சி.டி.வி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.