வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை...

நள்ளிரவில் கதவைத் தட்டி வீட்டில் தனியாக இருந்தவரிடம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை...

திருவண்ணாமலை | கீழ்பென்னாத்தூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த வெங்கடாசலபதி மனைவி பிருந்தா  வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பல் கதவைத் தட்டி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 2.5 கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 70 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடித்து சென்றனர்.

தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ஈடுபட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் கதவைத் தட்டி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு