டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு, லட்ச கணக்கில் ஆட்டை போட்ட கும்பலால் பரபரப்பு...

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.
டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு, லட்ச கணக்கில் ஆட்டை போட்ட கும்பலால் பரபரப்பு...
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் சிலர் சுவற்றை தொலையிட்டு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணன் இவர் நேற்று இரவு டாஸ்மாக் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்று இருந்த நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள சுவற்றில் துளையிட்டு மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்

இதையடுத்து தகவல் அறிந்த சேல்ஸ்மேன் கிருஷ்ணன் மற்றும் சூப்பர்வைசர்கள் பெரியதம்பி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் டாஸ்மாக் கடையில் கணக்கு பார்த்தபோது சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com