தஞ்சை மாரியம்மன் கோவில் பைபாஸ் கும்பகோணம் சாலை சந்திப்பில் சிலை தடுப்புக் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த பிரபாகரன், பைசல் அகமது, சாகுல் அமீது ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சிலை விற்பனைக்காக காத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடை கொண்ட நடராஜன் உலோக சிலை இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த சிலையை ரூ. 30 லட்சத்திற்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.