1.275 கிலோ கஞ்சா பறிமுதல்... இருவர் கைது...

சென்னையில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.275 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

1.275 கிலோ கஞ்சா பறிமுதல்... இருவர் கைது...

சென்னையில் போதை தடுப்புகான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது சென்னை காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள குதரத் மக்கான் தெரு மற்றும் லாயிட்ஸ் காலனி பகுதியில் உள்ள இருவேறு வீடுகளை தீவிரமாக கண்காணித்தனர்.

மேலும் படிக்க | பதுங்கி இருந்த 6 பேர் கைது! அதிரடியில் போலீஸ்...

அப்போது அவ்விரு வீடுகளிலும் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்ததை அடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (25) மற்றும் ராயப்பேட்டையைச் சேர்ந்த அன்பரசு (24) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1.275 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் வினோத் மீது கஞ்சா வழக்கு ஒன்றும், அன்பரசு மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0: தமிழக காவல்துறை சொல்வது என்ன?