அரை போதையில் மனைவியுடன் விடிய விடிய கணவன் செய்த அட்டூழியம்.. கரூரில் நடந்த சம்பவம்..!

மனைவியின் சடலத்துடன் குறட்டை விட்டு தூங்கிய கணவன்..!
அரை போதையில் மனைவியுடன் விடிய விடிய கணவன் செய்த அட்டூழியம்..  கரூரில் நடந்த சம்பவம்..!

கரூரில் மனைவியின் சடலத்தோடு விடிய விடிய போதையில் படுத்து குறட்டை விட்டு உறங்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த மாலதியும், பெரம்பலூர் மாவட்டம் பாடலூரை சேர்ந்த தனசேகரனும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், தனசேகரன் வேலூரில் தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றி வரும் நிலையில், அவர் எப்போதும் போதையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மாலதி தனது குழந்தையுடன் மாயனூரில் உள்ள தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 9-ம் தேதி மாலதியை பார்க்க மாயனூருக்கு ஃபுல் போதையில் இருந்த தனசேகரை கண்டதும் காண்டான மாலதி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருந்தும் தனசேகரன் அதனை பெரிதாக கண்டு கொள்ளாததால், மனமுடைந்த மாலதி வீட்டில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

ஒருபுறம் தூக்கில் தொங்கிய தாய், மறுபுறம் போதையில் சுருண்டு கிடக்கும் தந்தையை கண்டு செய்வதறியாது தவித்த அந்த 4 வயது குழந்தை அழத் தொடங்க, சத்தம் கேட்டு எழுந்த தனசேகரன் சற்றும் அசராது, கத்தியால் மாலதி தொங்கிய துப்பட்டாவை அறுத்து விட்டதுடன், அவரது சடத்தின் அருகே மீண்டும் படுத்து குறட்டை விட்டு தூங்க தொடங்கியுள்ளார்.

அழுதுக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடிச் சென்ற குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள், வீட்டினுள் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மாலதியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனசேகரனுக்கு போதை தெளியும் வரை காத்திருந்த அதிகாரிகள், பிறகு அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com