கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு...! போலீசார் விசாரணை...

கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு...! போலீசார் விசாரணை...
Published on
Updated on
1 min read

சென்னை | கொளத்தூரில் ஜவகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராணி இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கோயிலுக்கு நேற்று இரவு நடந்து சென்று இருக்கிறார். அப்பொழுது இவர்கள் தனியாக நடந்து சென்றதை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பாதிக்கப்பட்ட பெண், கோயிலுக்கு அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த மர்ம நபர் அவர் கழுத்தில் இருந்த தங்க தாலி செயினை அறுக்க முற்பட்டுள்ளார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக சுதாரித்துக் கொண்ட நாகராணி, தன்னைத் தாக்க வந்த நபரின் கையைப் பிடித்து அந்த நபர்களிடம் போராடினார். ஆனால் இந்த மர்ம நபர்கள் செயினை பறித்துச் செல்லும்போது கீழே விழுந்த நாகராணி தலையில் அடிபட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் பறித்து செல்லும்போது காயங்கள் ஏற்பட்டும் அவர்களுக்கு பின்பாக செயினை கொடுத்து விடுங்கள் என கூச்சலிட்டவாறு ஓடக்கூடிய காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கொளத்தூர் போலீசார் அந்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com