நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட குடுகுடுப்பக்காரர்களைப் பிடித்துக் கொடுத்த பெண்கள்...

நூதன முறையில் பெண்கள் மற்றும் ஆண்களிடம் குடுகுடுப்பைகாரர் மோசடி செய்தவர்களை பெண்கள் பிடித்து போலீசாரிடம் கொடுத்தனர்
நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட குடுகுடுப்பக்காரர்களைப் பிடித்துக் கொடுத்த பெண்கள்...

புதுக்கோட்டை | பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரத்தில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வீடு வீடாக சென்று குடும்பங்களில் பிரச்சனை உள்ளதாகவும் அந்த பிரச்சனையை  அந்தப் பிரச்சினையால் குடும்பத்துக்கு பெரிய ஆபத்து உள்ளதாக கூறியதாகவும் அதனை நிவர்த்தி செய்வதாகவும் கூறி அதற்கு சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்தப் பெண்கள் 1500, 2000, 3000 பணமாக கொடுத்துள்ளனர்.

கீழப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் என்பவரிடம் அவரது குடும்பத்தில் பிரச்சனை உள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்காக அவரது மோதிரத்தை வாங்கியுள்ளார்.மேலும் பூஜை செய்ய வேண்டும் எனவும் மேலும் பூஜை செலவுக்காக 3000 ரூபாய் கூகுள் பேய் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மோதிரத்தை கழட்டி வைத்த பிறகு செல்வம் மயங்கிய நிலைக்குச் சென்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அந்த குடுகுடுப்பைக்காரரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனையடுத்து பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரிடம் விசாரித்தனர்.

விசாரித்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மந்திர, எந்திர தகடுகள் மற்றும் முத்து போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அவரை பொன்னமராவதி காவல்துறையினர்  புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com