3 ஆண்களோடு உல்லாசம், 2 கல்யாணம் 2 பெண் குழந்தைகள்... சுஹாசினியின் 3 கணவனுக்கு ஷாக்!!

3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவிட்டு லட்சக்கணக்கில் நகை, பணத்தையும் ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

3 ஆண்களோடு உல்லாசம், 2 கல்யாணம் 2 பெண் குழந்தைகள்... சுஹாசினியின் 3 கணவனுக்கு ஷாக்!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நரபுராஜு கன்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார் ஒரு பிரைவேட் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுஹாசினி என்ற பெண் அறிமுகனார். ஏடிபி பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் சொன்னார். 
 
இருவரும் நடிப்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது நட்பு மேலும் நெருக்கமானது, இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளார். இந்நிலையில் சுஹாசினி தான் ஒரு அனாதை என்றும், தனக்கு அம்மா - அப்பா இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் பரிதாபம் அதிகமாகி, கடந்த டிசம்பரில் சுஹாசினியையே திருமணம் செய்து கொண்டார் சுனில். யாருமில்லாத அனாதை என்று சொன்னதால் சுஹாசினிக்கு 3 சவரன் நகைகளையும் சுனிலின் பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர்.

 
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திடீரென தனக்கு ஒரு மாமா இருப்பதாகவும், அந்த மாமாதான் தன்னை சின்ன வயசில் இருந்து வளர்த்து வந்ததாகவும், அவருக்கு இப்போது திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டதால், சிகிச்சைக்கு 6 லட்சம் பணம் தேவை என்று சொல்லி, 6 லட்சத்தையும் சுனிலிடம் வாங்கயுள்ளார் சுஹாசினி.
 
பணம் வாங்கிய விஷயமே, கடந்த 7 ம் தேதிதான் சுனிலின் பெற்றோருக்கே தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுனிலின் பெற்றோர், 6 லட்சம் ரூபாயை என்ன செய்தாய் என்று மருமகளிடம் கேட்டனர். கேட்க அடுத்த நாளே சுஹாசினி அங்கிருந்து எஸ்கேப்.
 
போன் செய்தாலும், ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டிருந்தது. அதனால், அவரை எப்படி கண்டுபிடிப்பது  என்று குழம்பிப்போயிருந்தனர். அப்போது,சுஹாசினியின் ஆதார் கார்டில் இருந்த விலாசத்தை பார்த்தனர்.  அப்போது தான் காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி, சுஹாசினியின் வீடுதான் அது. ஆனால், பல வருடம் முன்னாள் கணவருடன் அந்த வீட்டில் வசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் சுஹாசினிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, சுஹாசினிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது  சுனில்க்கு மற்றுமொரு ஷாக்.   இந்த விஷயம் எல்லாம் சுனிலுக்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட சுஹாசினி, "நான் இப்போது ஹைதரபாத்தில் இருக்கிறேன். 6 லட்சம் ரூபாயை கூடிய சீக்கிரம் தந்துவிடறேன். ஆனால் போலீசுக்கு போனால் நடக்கிறதே வேற" என்றும் மிரட்டியிருக்கிறார் சுஹாசினி.

 
இதோடு விட்டாரா? வெங்கடேஷை கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு இனொருவரையும் திருமணம் செய்து கொண்டேன். அவர்தான் முதல் கணவர், 2 வது கணவர் தான் இந்த வெங்கடேஷ். நீ 3வது கணவர் என்று சொல்லி, வாட்ஸ்அப்பில் போட்டோவையும் அனுப்பியுள்ளார் சுஹாசினி. முதல் கணவருக்கு ஒரு பெண் குழந்தை, இரண்டாவது கணவருக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துள்ளதும் சொல்லியிருக்கிறார்.
 
அதிர்ச்சி போன மூன்றாவது கணவன் சுனில் போலீசில் புகார் கொடுக்க, கல்யாணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டு  6 லட்சத்துடன் தலைமறைவான சுஹாசினியை தேடி வருகிறார்கள்.  இந்த புகாரை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சுகாசினி 3 போரையும் வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றி திருமணம் செய்து நகை பணம் ஏமாற்றியதும் தெரியவந்தது. 
 
மேலும் இதே போல வேறு யாரையாவது சுகாசினியின் ஏமாற்றியுள்ளாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.