தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...

அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...

சென்னை | நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜாரத்தினம்(22). இவர் தனது மனைவி சங்கீதா(20) உடன் கேடிஎம் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு நெற்குன்றம் திரும்பி உள்ளார்.

அவர்கள் இருவரும், சுமார் 9 மணியளவில் அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் எதிரே வரும்போது எழும்பூரில் இருந்து கோயம்பேடு வழியாக காரைக்குடிக்கு பயணிகளை ஏற்றில் கொண்டு சென்ற தனியார் பேருந்தை (அய்யா டிராவல்ஸ்) முந்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் சங்கீதா நிலைத்தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கே-4 அண்ணாநகர் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com