கள்ளகாதலை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி கொலை

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் அருகே கள்ள காதலை தட்டி கேட்ட இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30) என்பவர் இராமநாதிச்சன் புதூர் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை இராமநாதிச்சன் புதூரை சேர்ந்த லீயோன் பிரபாகரன் மற்றும் ரோஜ் அஜய் ஜான்சன் ஆகியோர் தட்டி கேட்டுள்ளர்கள். இதன் காரணமாக முன்விரோதம் இருந்த வந்த நிலையில் நேற்று இரவு குமாரபுரம் தோப்பூரில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு வெளியே வந்த இராமநாதிச்சன் புதூரை சேர்ந்த லீயோன் பிரபாகரன் மற்றும் அஜய் ஜான்சன் ஆகியோரை தோப்பூரை சேர்ந்த பிரபாகரன்,கண்ணன் மற்றும் அமுலு ஆகியோர் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ரோஜ் அஜய் ஜான்சனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ரோஜ் அஜய் ஜான்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் காயம் அடைந்த மற்றோரு நண்பர் இராமநாதிச்சன் புதூரை சேர்ந்த லியோன் பிரபாகரன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.