நகையை திருடி வாயில் புதைத்து வடிவேலு போல தப்பி செல்ல முயன்ற இளைஞர்...

நகைக்கடையில் புகுந்த இளைஞர் திருடிய நகையை வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகையை திருடி வாயில் புதைத்து வடிவேலு போல தப்பி செல்ல முயன்ற இளைஞர்...

தவம் படத்தில் கீரிப்புள்ள கதாபாத்திரத்தில் வந்த வடிவேலு கண்ணிமைக்கும் நேரத்தில் நகையைத் திருடி வாயில் போட்டுக் கொள்வார். இந்த நகைச்சுவைக் காட்சியை பார்த்து கற்றுக் கொண்ட இந்த ஆசாமி நிஜமாகவே இவ்வாறு செய்து பொதுமக்களிடம் சிக்கி தர்மஅடி வாங்கியுள்ளான். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. புதுச்சேரி நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் கடந்த 3-ம் தேதியன்று ஒடிசாவைச் சேர்ந்த ராஜசேகர் சவுத் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் தங்க செயின் வாங்குவதற்கு சென்றுள்ளார். 

மேலும் படிக்க | இன்னும் இந்த சிக்னல் எத்தனை காவு வாங்க போகுதோ?

அப்போது கடை ஊழியர்கள் ஒவ்வொரு செயினையும் காண்பித்து வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்கச் செயினை நாசூக்காக தூக்கிய இளைஞர் அப்படியே வாயில் போட்டு விழுங்கினார். இதைக் கண்ட ஊழியர்கள் திருட்டு ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து பெரியகடை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், ஒடிசாவில் இருந்து வந்த ராஜசேகர் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு செல்லவும், மது அருந்துவதற்கும் பணம் தேவைப்பட்டதாலும் இப்படியான திருட்டு வேலையில் இறங்கியதாக கூறியிருந்தார்.

மேலும் படிக்க | போதையில் ரயில் ஏற முயற்சித்த நபரின் கால் துண்டான சம்பவம்.. !

பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையின் மூலமாக இளைஞரின் சேப்டி லாக்கரில் வைக்கப்பட்ட செயின் பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னர் செயினை விழுங்கிய இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார். 

வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் கற்பனை கலந்தே எடுக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் இது சில இடங்களில் இது உண்மையாகியே வருகிறது.

மேலும் படிக்க | காதல் மனைவியை விட்டு மற்றொரு பெண்ணுடன்.... மாவட்ட ஆட்சியரிடம் புகார்!!!