தமிழகத்தில் சமூகக் குறைகள் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் சமூக சீர்கேடுகளுக்கு எதிர்த்து நிற்கும் சமூக ஆர்வலர்களுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டும் வருகின்றனர்.
இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தேனி மாவட்ட வீரபாண்டி பேரூராட்சி ஓடைப்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி பேரூராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் சமூக ஆர்வலர் பேராசிரியர் ராஜா கேள்விகள் எழுப்பினார்.
ஓடைப்பட்டி பேரூராட்சியில் முறையற்ற செயல்பாடுகளை ஆர்.டி.ஜ மூலம் கேட்டதற்கு சமூக ஆர்வலர் பேராசிரியர் ராஜா அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராசிரியர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்து ரூபாய் இயக்க தேனி மாவட்ட நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.