14 மீனவர்கள் விடுதலை... இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு ...

14 மீனவர்கள் விடுதலை... இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு ...

 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள் இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் இன்று காலை விடுதலை செய்து, இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் :

 ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதுவும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் உரிய மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் தெரிந்து கொள்ள : மன்னார்-வளைகுடா கடலில் கிடைத்த அரிய வகை கடல் பசு,டால்பின்களை கடலில் விட்ட மீனவர்கள்...

அதனை தொடர்ந்து தலைமன்னார் அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு விசைப்படகும் பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  இருந்த நிலையில் இன்று காலை 11:30 மணியளவில்  இலங்கை பருத்தி துறை நீதிமன்றம் விடுதலை  செய்தது.அவர்களை ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பவதாகவும்,இப்போது இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள : விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்...