1500 குழந்தைக்கள் பள்ளிக்கு செல்வதே இல்லை ஆய்வில் தகவல் - பக்கத்துல ஸ்கூல் இல்ல அதுனால் அனுப்பல்ல நரிக்குறவ பெற்றோர்கள்

தஞ்சை மாவட்டத்தில் 1,500 குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகள் எனவும், அதிகபட்சமாக மேல உள்ளூரில் 150 குழந்தைகள் செல்லவில்லை என அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1500 குழந்தைக்கள் பள்ளிக்கு செல்வதே இல்லை ஆய்வில் தகவல் - பக்கத்துல ஸ்கூல் இல்ல அதுனால் அனுப்பல்ல நரிக்குறவ பெற்றோர்கள்
Published on
Updated on
1 min read

தங்களுக்கு அருகில் பள்ளிக்கூடம் இல்லாததால் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என நரிக்குறவ பெற்றோர்கள் தகவல்.

1500 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. ஐந்து துறை அதிகாரிகள் தலைமையில் 15 ப்ளாக்கில் நடைபெற்ற இந்த ஆய்வில் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1500 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை எனவும் முதற்கட்டு தகவல் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உள்ளூரில் உள்ள நரிகுறவர் பகுதியில் மட்டும் சுமார் 150 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து நரிக்குறவர் பெற்றோர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் உறைவிட பள்ளி செயல்பட்டு வந்ததாகவும், தற்போது அது மூடப்பட்டுள்ளதாகவும். இதனால் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என கூறுகின்றனர்.

மேலும் இங்கிருந்து பள்ளிகூடம் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் நாங்கள் காலையில் 6:00 மணிக்கு வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பள்ளி செல்லும் வழியில் ஆறு, இரண்டு குளம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய உள்ளதால் பயந்து கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பவில்லை. தங்கள் பகுதியில் பள்ளிகளை திறந்தால் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தங்களுக்கு தினமும் விளைநிலத்தில் எலி பிடிப்பது, ஊசி, மணி விற்பது போன்ற அன்றாட கூலி தான் வேலை செல்கிறோம். எனவே தங்களுடைய குழந்தைகளை காலையில் 9:00 மணி வரை வீட்டில் இருந்து அவர்களை கிளப்பி பள்ளிக்கு அனுப்பாத நிலையில் உள்ளதாகவும், அருகில் பள்ளி இருந்தால் மாணவ மாணவிகளே தானாகவே கிளம்பி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே அரசு இப்பகுதியில் பள்ளிக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com