மர்மமான முறையில் 17 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்த பரபரப்பு சம்பவம்...

சாத்தான்குளம் அருகே கூண்டில் அடைத்து வைத்திருந்த 17 ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமான முறையில் 17 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்த பரபரப்பு சம்பவம்...

தூத்துக்குடி : சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் மந்திரம்.இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது ஊருக்கு அருகில் உள்ள சிதம்பராபுரம் பகுதியில் ஆட்டுக்கிடை போட்டுள்ளார்.

ஆடுகளைப் பட்டியிலும் ஆட்டுக்குட்டிகளை கூண்டுகளிலும் அடைத்து வைத்து பராமரித்து வந்துள்ளார்.காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலை 6 மணி அளவில் ஆடுகளை அடைப்பது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம் போல காலையில்  ஆட்டுக்குட்டிகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல கூண்டை திறந்து பார்த்த போது ஒரு கூண்டில் அடைத்து வைத்திருந்த 18 ஆட்டுக்குட்டிகளில் 17 ஆட்டுக்குட்டிகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனைப் பார்த்த ஆட்டின் உரிமையாளர் மந்திரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆட்டுக்குட்டிகள் எப்படி இறந்தது என்று தெரியாமல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து ஆட்டுக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்து ஆட்டுக்குட்டிகள் மூச்சு திணறி இறந்ததாக மருத்துவர் கூறியுள்ளார்.

ஆனால் ஆட்டின் உரிமையாளர் மந்திரம் கூறுகையில் 50 ஆண்டுகளாக இப்படித்தான் கூண்டில் அடைத்து மேய்ச்சலுக்கு கொண்டு செல்கிறோம். அப்போதெல்லாம் இதுபோன்று ஆட்டுக்குட்டிகள் மூச்சு திணறி இறந்ததில்லை. இப்பொழுது திடீரென்று இப்படி நடந்தது மர்மமாக உள்ளது என்று கூறினார்.

ஆடு மேய்க்கும் தொழிலை தவிர தனக்கு வேறு தொழில் தெரியாது ஆகவே அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இறந்த ஆட்டுக்குட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் 51 ஆயிரம் என்று ஆட்டின் உரிமையாளர் மந்திரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com