20 நாட்கள் 50 மணி நேரம்... நடக்கலாம் வாங்க; கோரிக்கை மனுக்களை தாங்க - அமைச்சர் மா.சு புது முயற்சி

மக்களுக்கு அதிகாலையே எழுந்து கொள்ளும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துவதற்கும்; மக்கள் ஆரோகியமாக இருப்பதற்குமான முயற்சி தான் இந்நிகழ்வு!
20 நாட்கள் 50 மணி நேரம்... நடக்கலாம் வாங்க; கோரிக்கை மனுக்களை தாங்க - அமைச்சர் மா.சு புது  முயற்சி
Published on
Updated on
1 min read

நடக்கலாம் வாங்க; மனுக்களை தாங்க

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலிகுன்றம் அம்பேத்கர் சிலை அருகே  நடக்கலாம் வாங்க; கோரிக்கை மனுக்களை தாங்க என்ற தலைப்பில் பொது  மக்களை  நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கை  மனுக்களைப் பெற்று பிரச்சனைக்கான தீர்வுகளை உடனடியாக சரி செய்வதற்காக நடைப்பயணம் இரண்டாவது நாளாக  இன்று நடைபெற்றது.

பொதுமக்கள் நலனில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மக்களுக்கு அதிகாலையே எழுந்து கொள்ளும் பழக்கத்தை  ஊக்கப்படுத்துவதற்கும்; மக்கள் ஆரோகியமாக இருப்பதற்கும் அந்தந்த பகுதியின்  அடிப்படை பிரச்சனைகளை  கண்டறிந்து தீர்வு காண்பதற்குமான முயற்சி தான் இந்நிகழ்வு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து மனுக்களை பெற்று அந்தந்த அலுவலர்களிடம்  ஒப்படைத்து அதற்கான தீர்வு காணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சைதாப்பேட்டை தொகுதியில் 20 நாட்களுக்குள்ளே மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்கான பிரச்சினையை சரி செய்வதற்காக அந்தந்த அலுவலர்களும் உடன் வந்து இரண்டு நாட்களில் பிரச்சனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

சைதாப்பேட்டை உள்ளடங்கிய பல்வேறு பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் இருக்கின்றது பெரிய அளவில் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது வகையிலும், அதே சமயம் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த பகுதியை பொருத்தவரை மழைக்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் 85 சதவீதம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும் நடைப்பயணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இவ்வாறு கூறினார்.

381 நடமாடும் மருத்துவ வாகன முகாம்கள்

பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்விக்கு? 

தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் தினம்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் அதே போல் எச் 1 கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளிலும் ஆய்வு செய்து வருவதாகவும் , குறிப்பாக பருவமழை முடிவடையும் வரை 381 நடமாடும் மருத்துவ வாகன முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com