சென்னை: 200 வீரர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி

சென்னை: 200 வீரர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி
Published on
Updated on
1 min read

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் சாய் விளையாட்டு குழுமம் சேர்ந்த 200 விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்த கொண்ட ஒற்றுமை ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 ஆவது பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூறும் வகையில் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒற்றுமை ஓட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தினர். 

இது சமூக ஒற்றுமை மற்றும் ஊழலற்ற இந்தியாவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றதாக சாய் குழும ஊழியர் டானியல் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com