போலீசாக நடித்து நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி பறித்த 3 போ் கைது...

சவுகாா்பேட்டையில் போலீஸ் போல் நடித்து ஒரு கோடியே 40 லட்சத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசாா் கைது செய்துள்ளனா்.

போலீசாக நடித்து நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி பறித்த 3 போ் கைது...

சென்னை | ஆந்திர மாநிலத்தை சோ்ந்த நகை வியாபாாி சுப்புராவ் என்பவா் சென்னை யானைகவுனி பகுதிக்கு நகை வாங்குவதற்காக வந்தாா். அப்போது அவாிடம் மா்ம நபா்கள் போலீஸ் போல் நடித்து ஒரு கோடியே 40 லட்சத்தை பறித்து சென்றனா். 

சவுகார்பேட்டையில் நடந்த இந்த சம்பவத்தின் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி இம்ரான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இம்ரானிடம் போலீசார் நடத்தி விசாரணையில் குருவி போன்று ஹவாலா பணத்தை எப்படி கொள்ளை அடிப்பது தொடர்பான ஸ்கெட்ச் போடுவதற்கு மூளையாக செயல்பட்டவர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இம்ராஸ் அளித்த தகவலின் அடிப்படையில் நீலகிரி சேலம் மற்றும் கர்நாடகா விரைந்து தனிப்படை போலீசார் மூன்று பேரை கைது செய்தது. முக்கிய குற்றவாளி இம்ரான் மீது தமிழ்நாடு முழுவதும் வழக்குகள் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பள்ளி வாகனத்தில் மோதிய இருசக்கர வாகனம்...