கடலூரில் தனியார் பேருந்து மோதி 3 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்!

கடலூரில் தனியார் பேருந்து மோதி 3 பேர் உயிரிழப்பு; 30 பேர் படுகாயம்!

கடலூரில் தனியார் பேருந்து ஒன்று அடுத்தடுத்து இரண்டு வாகனத்தின் மீது மோதியதால் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

கடலூரில் இருந்து  தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து குறிஞ்சிப்பாடி அருகே செல்லும் பொழுது பேருந்தின் முன் பக்கமாக சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டது.  அப்போது எதிரில் வந்த கார் மீது மோதி நிலை தடுமாறியது. பேருந்து கார் மீது மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம அடைந்தனர்.

கார் மீது மோதிய பேருந்து தரதரவென இழுத்துச் சென்று எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.  இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த ஒருவரும், இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களும் பலியாகினர். மேலும், தனியார் பேருந்தில் பயணித்தவர்களும் காரில் பயணித்தவர்களும் என முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com