அனுமதியின்றி மண் திருடிய 3 லாரிகள் பறிமுதல்... அதிரடியாக களம் இறங்கிய வட்டாட்சியர்...

ஏரி அருகே உள்ள பட்டா நிலத்தில் அனுமதியின்றி கள்ளத்தனமாக மண் எடுத்த 3 லாரிகளை அரக்கோணம் வட்டாட்சியர் பறிமுதல் செய்து நெமிலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அனுமதியின்றி மண் திருடிய 3 லாரிகள் பறிமுதல்... அதிரடியாக களம் இறங்கிய வட்டாட்சியர்...

அரக்கோணம் வட்டம் பள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வரப்பெற்றது.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் இன்று மாலை அரக்கோணம்  வட்டாட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் பள்ளுர் கிராமத்தில் கள்ளத்தனமாக மண் எடுத்துக் கொண்டிருந்த 3 டாரஸ் லாரிகள் கைப்பற்றி நெமிலி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர்கள்.

இதுகுறித்து வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரியின் உரிமையாளர் யார் என்றும், தப்பியோடிய ஒட்டுனர் மற்றும் நபர்கள் யார் எனவும் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

மேலும் படிக்க | 2 கையெறி குண்டுகளை கைப்பற்றிய போலீசார்...