முன்பக்கக் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை...

வீட்டின் முன்பக்க கதவு உடைத்து 35 சவரன் தங்க நகை கொள்ளை குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

முன்பக்கக் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை...

ராணிப்பேட்டைவாலாஜாபேட்டை அடுத்த தலங்கை கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியரான மகேந்திரன்(33) தனது மனைவி தனலட்சுமி(29) மற்றும் குழந்தையுடன் நேற்று இரவு கீழ் வீட்டை பூட்டிவிட்டு மேல் வீட்டில் உறங்கி உள்ளனர்.

இன்று காலை மேல் வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது கீழ் வீட்டில் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மகேந்திரன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | லிஃப்ட் கேட்பது போல நடித்து கொள்ளையடித்த சகோதரர்கள் கைது...

இதனை தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்த பொழுது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகள் பீரோக்கள் உடைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டு இருந்த 35 சவரன் தங்க நகைகள் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை தொடர்ந்து வாலாஜாபேட்டை காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை...