சுக பிரசவத்தில் 4.2 கிலோ எடையுள்ள குழந்தை.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி...

சுக பிரசவத்தில் 4.2 கிலோ எடையுள்ள குழந்தை.. மருத்துவர்கள் நெகிழ்ச்சி...

புளியந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்தவர் முகமது ஹபீப். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சம்ரீன் பேகம் (Samrin begum). இவர்களுக்கு ஏற்கெனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இரண்டாவது முறை கருவுற்ற சம்ரீன் பேகம், பிரசவத்திற்காக புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நேற்று காலை 11 மணிக்கு சேர்க்கப் பட்டார். இவருக்கு பிரசவலி ஏற்பட்டு நேற்று பிற்பகலில் 1.20 மணிக்கு லேபர் வார்டு அழைத்து சென்றனர்.

மருத்துவர் விஜயலட்சுமி தலைமையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் எடை போட்டுப் பார்த்த போது 4.20 கிலோ எடை இருந்தது. எடை அதிகமாக இருந்தாலும் நல்ல உடல் நலத்துடன் குழந்தை இருந்துள்ளது.

இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் தேவிகலா பேசுகையில், 4.2 எடையுள்ள குழந்தையை சுக பிரசவத்தில் பிறந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக உதிர போக்கு இல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பிரசவம் பார்க்கப்பட்டது.

தாயும், சேயும் நலமாக உள்ளனர். அடுத்த ஆறு மாதத்திற்கு தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com