பழங்குடியின மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை...! சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்...!

பழங்குடியின மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை...!  சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்...!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 35 குடும்பங்களைச் சேர்ந்த 105 நபர்களுக்கு இருளர் சான்று வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஒவ்வொரு வீடாகச் சென்று பழங்குடி இன மக்களுக்கான சான்றிதழ் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 250 குடும்பங்களை சேர்ந்த இருளர் மற்றும் ஆதியன்குடி பழங்குடி வகுப்பினர்களுக்கு பழங்குடி இன சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்றும் இப்பழங்குடி இன மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடுகள்  கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கோவை கார் விபத்து தொடர்பாக முதலமைச்சர் பரிந்துரைத்தது என்ன?