எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் 5ஜி நெட்வொர்க் செல்ஃபோன் டவர்...

பொது மக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் பாரதிதாசன் நகர் பகுதியில், 5ஜி நெட்வொர்க் செல்ஃபோன் டவரை அதிகாரிகள் அமைத்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் 5ஜி நெட்வொர்க் செல்ஃபோன் டவர்...

திருவாரூர் | மன்னார்குடி அருகே அஷேசம் பாரதிதாசன் நகரில் 5ஜி நெட்வொர்க் செல்ஃபோன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் டவர் அமைக்கும் பணி தொடர்ந்ததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து, செல்ஃபோன் டவர் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்போன் டவர் அமைப்பதற்கான எவ்வித அனுமதியும் பெறாமல் அப்பகுதி பொதுமக்களின் ஒப்புதல் கேட்கப்படாமலும் செல்போன் டவர் அமைக்க பணி நடைபெற்று வருவதாகவும் செல்போன் டவர் அமைக்கும் பட்சத்தில் அது ஏற்படுத்தும் மின் காந்த கதிர்வீச்சினால்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் எனவும் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே குடியிருப்பு பகுதியில் அமைக்கப்படவிருக்கும் செல்போன் டவர் பணிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலிசார் செல்போன் டவர் அமைக்கும் அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்போன் டவர் இனி இங்கு செயல்படாது என உத்திரவாதம் அளிக்கபட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com