தொடர்ந்து 6 மணி நேரம் ஸ்லோகம்... புது வகையான சாதனை படைத்த ஸ்ரீகிருஷ்ணா குடும்பம்...

சம்பூர்ணா நாராயணீயம் ஸ்லோகங்கள் 100 தசகம் தொடர்ந்து 6 மணி நேரம் பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று நோபல் உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கத்தை  பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து 6 மணி நேரம் ஸ்லோகம்... புது வகையான சாதனை படைத்த ஸ்ரீகிருஷ்ணா குடும்பம்...
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி | கச்சராபாளையம் ரோட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஸ்ரீ கிருஷ்ணா குடும்பம் குழுவினரின் நிறுவனர் உமா இராமச்சந்திரன் மற்றும் பாரதி தலைமையில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எடிட்டோரியம் போர்டு இயக்குனர் ஹேமலதா முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ண குடும்பம் குழுவினர் சம்பூர்ண நாராயணியம் என்ற தலைப்பில் நூறு ஸ்லோகம் தசகத்தை 30 முதல் 80 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுமார் 44 பேர் தொடர்ந்து 6 மணி நேரம் பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சான்றிதழ்களையும் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த ஸ்ரீ கிருஷ்ணா குடும்ப குழுவினர் இதற்கு முன்பு கேரளா குருவாயூரப்பா கோவிலில் ஆறு மணி நேரம் சம்பூர்ண நாராயணன் தசகம் பாடி சாதனை புரிந்து அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் சாதனை புரிந்தனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் பாட உள்ளார்கள் என்றும் அதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆறு மணி நேரம் பாடி சாதனை படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் சேலம் விழுப்புரம் புதுச்சேரி கடலூர் வேலூர் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா குடும்ப குழுவினர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆரிய வைசிய பெண்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com