விளையாட்டுகளால் தான் மாணவர்களின் ஒழுக்கம் உயரும் - அமைச்சர் அன்பில்மகேஷ்...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63 வது குடியரசு தின தடகளப்போட்டிகள் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.
விளையாட்டுகளால் தான் மாணவர்களின் ஒழுக்கம் உயரும் - அமைச்சர் அன்பில்மகேஷ்...
Published on
Updated on
3 min read

திருவண்ணாமலை | விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான 63 வது குடியரசு தின தடகள போட்டிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடைக்கி வைத்தார்கள், சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகோபால், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திண்டுக்கல் லியோனி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகள் தொடக்க விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றும் வகையில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, அதனை தொடர்ந்து திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் ஜிம்னாஸ்டிக் செய்து காண்பித்தனர், அதேபோன்று மாணவர்கள் மால்கம் கம்பத்தில் பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த மாவட்ட வீரர் வீராங்கனைகள் அணி வகுப்பு மரியாதை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டு ஆறு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான தடைகள போட்டிக்கான தீப ஜோதியினை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஏற்றி வைத்தார், மாநில அளவில் தங்க பதக்கம் வென்ற ஆறு மாணவிகள் மைதானத்தை சுற்றி வந்து தீபஜோதியினை ஏற்றி வைத்தனர்.

மாநில அளவிலான தடகளப் போட்டிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திண்டுக்கல் லியோனி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சமாதான புறாக்களை வானில் பறக்க விட்டும், பல வண்ண பலூன்களை பறக்கவிட்டும் தொடங்கி வைத்தனர்.

இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் தடகள போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதிற்கு ஏற்ப மூன்று பிரிவுகளில் 100 மீட்டர் 400 மீட்டர், 800 மீட்டர், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன, தமிழக முழுவதும் இருந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக 7721 மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தடகளப் போட்டியில் முடக்கி வைத்து விழா சிறப்புரையாற்றிய அன்பில் மகேஷ் பொய் பேசுகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை விளையாட்டு துறைக்கு தனி கவனம் செலுத்தி வருபவர் என்றும், தங்க வேட்டை என்ற பெயரில் ஒலிம்பிக்கில் தங்கம் வெள்ளி வெண்கலம் வெல்பவர்களுக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி விளையாட்டு வீரர் வீராங்கனை ஊக்குவிப்பவர் தமிழக முதலமைச்சர் என்று சுட்டிக்காட்டியவர், விளையாட்டு என்பது மாணவர்களின் ஒழுக்கம் தலைமை பண்பு பொறுப்பு நல்ல விஷயங்களில் விளையாட்டுகளினால் தான் மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,  

அரசு அதிகாரிகள் முறையாக செயல்பட்டால் தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சரியான முறையில் சென்று சேரும் என்றும், தமிழகத்தை உலகத்தோடு ஒப்பிட்டு முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்பவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று பெருமிதமாக பேசினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com