7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு...
வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களாக பெய்து வரும் நிலையில், தற்போது 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை காரண்மாக, இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழையாக பெய்து வரும் நிலையில், மழையின் தாக்கம் சிறிது குறைந்து காணப்படுகிறது. ஆனாலும், பல பகுதிகளில் தற்போது வரை மழை பெய்த படியே உள்ளது.
கடந்த மாதம் அக். 29ம் தேதி துவங்கிய மழையானது கடந்த இரண்டு நாட்களாக மோசமாகியுள்ளது என்றே சொல்லலாம். பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மழை நின்ற பாடே இல்லை.
மேலும் படிக்க | குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...
கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 6ம் தேதி வரை, ஒரு சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னையைப் பொறுத்த வரை தொடர்ச்சியாக வானம் மேக மூட்டமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, இன்றும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்... வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, கரூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் இடியுடம் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?