ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி...!  கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேர் கைது...!!

ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி...!  கம்யூனிஸ்ட் கட்சியினர் 70 பேர் கைது...!!
Published on
Updated on
1 min read

ஆளுநர் வருகையொட்டி கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு தஞ்சைக்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் முகவராகவும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து ஆளுநர் ரவி செயல்படுவதாகவும், மேலும் ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com