கொள்ளிடம் ஆற்றில் முதலையா? அச்சத்தில் பொது மக்கள்...

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் முதலை தென்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் முதலையா? அச்சத்தில் பொது மக்கள்...
Published on
Updated on
1 min read

அரியலூர் | திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ராஜா என்ற மீனவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மீன் வலையில் முதலை சிக்கி இருப்பதை தெரியாமல் இழுத்துள்ளார். அப்போது அருகில் வந்த போது தான் மீன்வலையில் முதலை இருப்பது ராஜாவிற்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீன் வலையை அங்கேயே போட்டுவிட்டு கரைக்கு திரும்பினார். கொள்ளிடம் ஆற்றில் முதலை இருக்கும் செய்தி அறிந்த  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டுவும் கொள்ளிடம் ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த முதலையால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக முதலையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com