ஆற்றில் உல்லாசமாக உலா வரும் முதலை...

திருப்பூரில் அமராவது ஆற்றில், ஒரு முதலை உல்லாசமாக உலா வந்து பொது மக்களை பயத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆற்றில் உல்லாசமாக உலா வரும் முதலை...

திருப்பூர் | மணலூர் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலை மூலனூர் அருகே கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மணலூர் அமராவதி ஆற்றின் கரையோரம் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது.

அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டத்தை கடந்து வடகரை என்னும் இடத்தில் கரூர் மாவட்ட எல்லைக்குள் வந்து திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கடந்த 6 மாதமாக ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | ரூ.10 லட்சம் மற்றும் 10 சவரன் நகைகள் திருட்டு...

இந்த நிலையில் மணலூர் பகுதியில் காலை 9: மணி அளவில் அமராவதி ஆற்றில் முதலை இருப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மேலும் ஒரு சிலர் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர். இதனால் அமராவதி ஆற்றின் அருகே செல்ல அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் முதலையை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த கன்னிவாடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக மணலூர் செல்லாண்டி அம்மன் கோவில் முன்பாக ஆற்றுக்குள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என. பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 20 நாட்களுக்கு முன்பு தாராபுரம் அருகே சீதக்காடு தடுப்பணையில் இரண்டு ராட்சத முதலைகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மணலூரில் அமராவதி ஆற்றில் முதலில் இருப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க | திமுக!!! விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்குங்க பாஜக அறிக்கை