சிவனை பக்தி பரவசமாக வழிப்படும் நாய்... சேலத்தில் நடந்த விநோதம்...

சிவனை பக்தி பரவசமாக வழிப்படும் நாய்... சேலத்தில் நடந்த விநோதம்...

சேலம் : வலசையூர் பகுதியில் ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் ஆத்ம லிங்கேஸ்வரர் சிலை அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் சங்குமுழங்க ஸ்ரீ ஆத்ம லிங்கேஸ்வரருக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | நாயை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்...

இங்கு கோவிலில் பைரவர் என்று நாய் வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பொழுது பைரவர் என்ற நாய் ஆத்ம லிங்கேஸ்வரரை சத்தங்கள் எழுப்பி வழிபட்டு பக்தி பரவசம் அடைகிறதுகடவுளை வழிபட வரும் பக்தர்கள் பைரவர் என்ற நாய் வழிபடுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் படிக்க | கல்யாணி யானை உடல்நிலை பரிசோதனை...! எடை குறைக்க அறிவுறுத்தல்..!

குறிப்பாக முதல் அபிஷேகம், அலங்காரம் மற்றும்  நெய்வேதியம் காட்டும்போது மட்டுமே பைரவர் நாய் வழிபடுவதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றனர். மற்ற நேரங்களில் கடவுளை வழிபட்டு சத்தம் எழுப்புவது இல்லை என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க | தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல...