சாலைகளில் படையெடுக்கும் யானைகள் கூட்டம்...! பொதுமக்கள் அச்சம்...!

சாலைகளில் படையெடுக்கும் யானைகள் கூட்டம்...! பொதுமக்கள் அச்சம்...!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும், சாலைகளிலும் உலா வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முள்ளூர் பகுதியில் 5 யானைகள் தேயிலைத் தோட்டத்தில் இருந்து திடீரென சாலையில் வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

பின்னர் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு சென்றது. அதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாக தேயிலைத் தோட்டத்தில் உலாவியதால் அங்கிருந்த தேயிலை விவசாயிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்கள் அதனால் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.