சமவெளி பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம்...! 10 நாட்களாக விரட்டும் பணி தீவிரம்...!

சமவெளி பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம்...!  10 நாட்களாக விரட்டும் பணி தீவிரம்...!

குன்னூரில் 10 நாட்களாக முகாமிட்டுள்ள 9 காட்டுயானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாகவே சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் கூட்டம் தற்போது கிராம பகுதிகளில் முகாமிட்டுள்ளது.
அவ்வப்போது தேயிலைத் தோட்டம் மற்றும் சாலைகளில் உலா வரும் இந்த காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தேயிலை தோட்டத்தில் தற்போது 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த பகுதிக்கு அருகே தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி உள்ளதால் அப்பகுதிக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  தீ மூட்டியும், பட்டாசு வெடித்தும் துரத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர்  அறிவுறுத்தியுள்ளனர். 

இதையும் படிக்க : பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம்..! தொடங்கிய முன்னேற்பாடுகள்...!