சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்...! சுற்றுலாப் பயணிகள் அச்சம்...!

சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்...!  சுற்றுலாப் பயணிகள் அச்சம்...!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் மதுக்கரை வரை மேற்கு தொடர்ச்சி மலை சரணாலயமாக உள்ளது. இதற்கு காரணம் இந்த மலையை ஒட்டி அமைந்துள்ள புதர்காடுகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தப் புதர்காடுகள் வனவிலங்குகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதால் இங்கு யானை, சிறுத்தை மற்றும் புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இதில் மேட்டுப்பாளையம் சிறுமுகை, காரமடை வனப்பகுதியில் பவானி நதி ஓடுவதாலும் புதர்காடுகளின் அடர்த்தி குறையாமல் இருப்பதாலும் தென்னிந்திய யானைகளின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ற சூழல் உள்ளதாலும் டிசம்பர் முதல் ஜூன் மாதம் வரை இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் அருகே காட்டு யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும்போது அந்த வழியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் செல்லும்போது வன விலங்குகள் சாலையை கடக்கும் போது விலங்குகளை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க : பாஜக: மாவட்ட தலைமையை மறைமுகமாக இயக்குகிறதா மாநில தலைமை?