விமான நிலைய காம்பவுண்டில் மோதி உள்ளே புகுந்த லாரி...!

விமான நிலைய காம்பவுண்டில் மோதி உள்ளே புகுந்த லாரி...!

ஓசூரில் இருந்து அறந்தாங்கிக்கு தினசரி காய்கறி ஏற்றிச் செல்லும் எஸ் வி ஆர் எனப்படும் ரெகுலர் லாரி காய்கறி ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஏர்போர்ட் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது, லாரியின் பின்னால் மோதியதுடன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏர்போர்ட் காம்பவுண்ட் சுவரின் மீது மோதி உள்ளே நுழைந்தது.

இந்த விபத்தானது, திருச்சி விமான நிலையம் ஓடுதளம் அருகே விபத்து நடைபெற்றதால், இச்சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு, விமான நிலைய ஓடுதளம் முன்பு உள்ள விமானத்திற்கு சிக்னல் வழங்கும் சிக்னல் கோபுரம் அருகே உள்ள காம்பவுண்ட் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் தற்போது சாலையில் வந்த லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியது குறிப்பிடத்தக்கது.