மலை போல் குவித்து வைக்கப்பட்ட காலாவதியான ஸ்நாக்ஸ்...

மேலப்பாளையத்தில் வீடு முழுவதும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான தின் பண்டங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலை போல் குவித்து வைக்கப்பட்ட காலாவதியான ஸ்நாக்ஸ்...

நெல்லை | மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா கல்லூரி செல்லும் சாலையில் பாத்திமா நகரில் உள்ள வீடு ஒன்றில் முன்னணி நிறுவனத்தின் பெயரில், காலாவதியான பிஸ்கட் பாக்கெட் வீடு முழுவதும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதை கவனித்த அப்பகுதி மக்கள் சட்ட விரோதமாக காலாவதியான தின் பண்டங்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின், உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம் அந்த வீட்டிற்கு நேரில் சென்று பிஸ்கட் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தார். அவை அனைத்தும் காலாவதியானவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | கோவை: மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தேவி அண்ட் கோ என்ற பெயரில் பிரிட்டானியா நிறுவனத்தில் ஏஜென்ட் எடுத்து மேலப்பாளையம் பகுதியில் உள்ள கடைகளுக்கு அந்நிறுவனத்தின்  பிஸ்கட் உள்பட தின் பண்டங்களை விற்பனை செய்வதும் கடைகளில் விற்பனையாகாமல் திருப்பி வழங்கும் தின் பண்டங்களை இந்த வீட்டில் சேமித்து வைத்து நிறுவனத்துக்கு திருப்பி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது.

ராஜேந்திரன் ஏஜென்ட் எடுத்துள்ள லைசென்ஸ் முறைப்படி பதிவு செய்யப்பட்டதா என உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார் இது வழக்கமான நடைமுறை என்றும் தின் பண்டங்கள் சேமித்து வைத்ததில் விதிமீறல் இல்லை என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார் இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த அபு பக்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த குடோனில் காலாவதியான பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வைத்திருந்தனர் சந்தேகத்தின் பெயரில் காவல்துறைக்கு தகவல் அளித்தோம் அவர்கள் இந்த தின் பண்டங்கள் நிறுவனத்துக்கு அனுப்ப இருப்பதாக தெரிவித்தனர் தற்போது எங்களுக்கு சந்தேகம் தீர்ந்து விட்டது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க | காலாவதியான குளிர்பானங்களை வீசிச்சென்ற மர்ம நபர்கள்...