துணிக்கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்...! வெளியான சிசிடிவி காட்சி...!

துணிக்கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்...! வெளியான சிசிடிவி காட்சி...!

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக விழுப்புரம் காமதேனு நகரச் சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் துணிக்கடை ஒன்றை திறந்து நடத்தி வருகிறார். இதில் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் அஸ்வின் கடைக்கு முன்பாக நகராட்சி ஆணையரிடம் ஒப்புதல் பெற்று கடை விளம்பரம் தொடர்பாக டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவ்வழியாக திடீரென விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் குப்பை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நகராட்சி ஊழியர் அன்சர், அவரது மகன் நாசர் ஆகிய பலரை அழைத்து வந்து யாரைக் கேட்டு பேனர் வைத்தார் அதற்கு பணம் கட்ட வேண்டும் என துணிக்கடை உரிமையாளரை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே துணிக்கடையில் வேலை பார்க்கும் நபர்கள் மற்றும் உரிமையாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் அஸ்வின் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளார். ஆனால் புகார் வாங்க அங்கு யாரும் முன் வராததால் இதுகுறித்து ஆன்லைன் மூலம் தன்னுடைய புகார் மனுவை காவல் நிலையத்திற்கு வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி தற்சமயத்திற்கு சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : ஒரு மாதமாக நீரில் மூழ்கிய வாழை மரங்கள்...